Header Ads

வெசாக் தினம்: இலங்கையில் ஜொலிக்கும் கட்டடங்கள்

கௌதம புத்தர் பிறந்த, பரிநிர்வாணம் அடைந்த மற்றும் மறைந்த தினமே வெசாக் தினம் என்று உலகெங்கும் உள்ள பௌத்தர்களால் அனுட்டிக்கப்படுகின்றது. இலங்கையில் சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு இது மிகவும் முக்கியமான நாள்.
அதாவது, விசாக மாதத்தில் வரும் பௌர்ணமி தினமே வெசாக் தினமாகும். ஏப்ரல் மாதம் முதல் மே மாதத்தில் இது பூரணை தினத்தில் வருவதுண்டு. இந்த தடவை ஏப்ரல் மாதத்தில் வந்துள்ளது.
இலங்கையில் பௌத்தர்கள் வாழும் தென்னிலங்கை எங்கிலும் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தலைநகர் கொழும்பு உட்பட இலங்கை எங்கிலும் விளக்குகளை அல்லது தீப பந்தல்களை அமைத்து இதனை சிங்கள மக்கள் கொண்டாடுவார்கள்.
இந்த தினத்தன்று பல நிகழ்வுகள் நடைபெறும். ஒன்று பௌத்த மடாலயங்கள், கோவில்கள் மற்றும் விகாரைகளுக்கு சென்று மக்கள் புத்த பெருமானை வணங்குவார்கள். அடுத்தது, அவர்கள் தாம் வாழும் இடமெங்கிலும் தன்சாலைகளை (உணவு வழங்கும் நிலையங்களை) அமைத்து அனைவருக்கும் அன்னதானம், தாக சாந்தி ஆகியவை செய்வார்கள். அதேவேளை முக்கிய இடங்களில் பெரும் விளக்குகளுடனான பந்தல்களை அமைத்து, அதில் புத்த பெருமானின் வரலாற்றை பேச முயலுவார்கள்.
வெசாக் தினம்
வெசாக் தினம்
வெசாக் தினம்
வெசாக் தினம்
வெசாக் தினம்
வெசாக் தினம்
வெசாக் தினம்
வெசாக் தினம்
வெசாக் தினம்
Source: BBC Tamil

No comments